13551 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 1, காட்சி 1, ஒக்டோபர்-டிசெம்பர் 1994.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், குருநகர்).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 20.00, அளவு: 20.5×15 சமீ.

‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. இவ்விதழில், தேவையும் நோக்கமும், ஆசிகள்: கலை வழி இறை பணி (நீ. மரியசேவியர்),

பண்பாடும் பாரம்பரியக் கூத்துக்களின் பயன்பாடும் (குழந்தை ம.சண்முகலிங்கம்),

நாட்டுக் கூத்துக் கலைஞருடன் ஒரு பொழுது (அண்ணாவியார் அ. அருளப்பு),  சிங்கள அரங்கில் தமிழ் நாடகப் பாரம்பரியத்தின் செல்வாக்கு (தமிழில் : யோ.அன்ரனி யூட்), நூல் நுகர்வு (மனோரஞ்சனி அல்பிரட்), விமர்சனம்: நாமிருக்கும் நாடு நமதே (பு. வதனன்), விமர்சனம்: ஒரு தேடல் (வி. எம். ஜெறாட்), நிகழ்வும் பதிவும் (ம.போ.ரவி -தொகுப்பு),’ஒற்றுமையே பலம்’-சிறுவர் நாடக எழுத்துரு (யோ.யோண்சன் ராஜ்குமார்) ஆகிய ஆக்கங்கள் முதலாவது இதழை அலங்கரித்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 007601).

ஏனைய பதிவுகள்