இ.சு.முரளிதரன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஜுன் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).
vi, 86 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-4676-08-4.
இந்நூல் சினிமாவின் பல தளங்களைப் பற்றியும் பேசுகின்றது. திரைப்படங்களின் பெயர்கள், பின்னணிப் பாடல், கதைக்களங்கள், திரைக்கதை, நடிகர்கள், அழுத்தமாகக் கூறப்படும் கருத்துக்கள், என்றவாறாக பதினாறு கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. தமிழ்த் திரைப்படத் தலைப்புக்கள் ஒரு குறும்பார்வை, திரைப்படங்களில் நகலெடுப்பு-கமலஹாஸனை முன்வைத்து, தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம்: வணிகமாக்கப்பட்ட வலிகள், தமிழ்த் திரைப்படங்களில் குறியீடு- ஆழமறியாத ஒரு தேடல், தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்குநரின் வகிபாகம்- வணிக சினிமா நோக்குநனின் நுனிப்புல் மேய்ச்சல், மணிரத்தினம் சினிமாவில் நிஜ மாந்தர்களின் நிழல், கனதியான முயற்சிகளின் கால்கோள்-பதேர் பாஞ்சாலி, கனவுருவ வரைபுகளால் கருத்தியல் திரட்டு, கொண்டாட்ட தேவதை ‘ஸ்ரேயா கோஷல்’, உண்மையின் பன்முக வடிவம் – Rashomon, ஈழத்தின் வசீகரம் சுவறவைத்த ஈரானிய சினிமா, புனிதம் தகர்க்கும் புறஹந்த களுவற, நகரும் படிமங்களில் நாகேஷ், வர்மக் கலையும் தமிழ் சினிமாவும்-கால்கோள் நிலைக் குறிப்புகள், அகிலத் தரமான அப்கானிஸ்தான் சினிமா, தெவிட்டாத திரைப்படிமம் Bicycle Thief. ஆகிய 16 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் இ.சு.முரளிதரன், நுங்கு விழிகள், நள தமயந்தி, புழுவிற்கும் சிறகு முளைக்கும் ஆகிய கவிதைத் தொகுப்புகளை முன்னதாக வெளியிட்டுள்ளார். அண்மைக் காலங்களில் பின்நவீனத்துவப் பாங்கான வித்தியாசமான சிறுகதைகளையும் எழுதி வருபவர்.