அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, இல.1, ஓடைக்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, ஆவணி 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
iv, 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×13 சமீ., ISBN: 978-955-3989-01-7.
இந்நூலில் ஆசிரியர் பல்வேறு சர்வதேசத் திரைப்படங்கள் பற்றி ஊடகங்களில் எழுதிய பத்து அறிமுக/விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறும்படவிழா, இரக்கமற்ற ஒரு காதல்கதை (A Cruel Romance -ரஷ்யா), ரோமியோ-யூலியற் மற்றும் இருள் (Romeo Juliet and Darkness-செக்கொஸ்லோவாக்கியா), சொரயாவுக்குக் கல்லெறிதல் (Stoning of Soraya -ஈரான்), நிலம் நடுங்குகின்றது (La Terra Trema-இத்தாலி), விருந்து (Party -ஹிந்தி), ஒரு தலைமுறை (A Generation-போலந்து), எலுமிச்சை மரம் (Lemon Tree-இஸ்ரேல்), பாலம் (The Bridge-ஜேர்மனி), ஒருத்தி (தமிழ்) ஆகிய பத்து கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63632).