சிவானந்தன் வித்தியாதரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
101 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-554-3.
சிறுவர் முதல் பெரியோர் வரை தாங்களே வாசித்து சதுரங்கத்தினை விளையாடக் கூடியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சதுரங்க விiயாட்டிலுள்ள அனைத்து அடிப்படை விதிமுறைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்விளையாட்டினைப் பற்றிய ஆழமான நுணுக்கங்களை அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். தமிழ்ப் பதங்களுக்கு இணையான ஆங்கிலச்சொற்கள் அனுசரணையாக இருக்குமெனக் கருதி ஆங்கிலப் பதங்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. இந்நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவது பகுதியில் சதுரங்க அடிப்படைகளும் விதிமுறைகளும் எளிய தமிழ்மொழி நடையில் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியில் தொடக்க ஆட்டம் பற்றிய அடிப்படைகளும் நுணுக்கங்களும் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அளவெட்டியில் வசித்துவரும் இந்நூலாசிரியர் கடந்த ஒரு தசாப்தமாக யாழ்ப்பாண மண்ணில் பல சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்றும், பல போட்டிகளை நடத்தியும், பயிற்சிக் கருத்தரங்குகளை நடாத்தியும் அனுபவம் பெற்றவர்.