13574 குட்டித்தம்பி தங்கைக்கு.

தி.திருஷன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், திருநெல்வேலி).

16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

சிறுவர்களுக்கான சுகாதார அறிவினை வழங்கும் சிறுவர் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 4ஆம் ஆண்டு மருத்துவ பீட மாணவரான தி.திருஷன் இந்நூலை தொகுத்து வெளியிட்டுள்ளார். எங்கள் வீடு, ஈரும் பேனும், கண்களைக் காப்போம், காதைப் பேணிக் காத்துக்கொள், வெள்ளை வெள்ளை பற்கள், கையைக் கழுவு சுட்டிப் பயலே, குட்டித்தம்பி தங்கைக்கு அண்ணாவின் அறிவுரைகள், நிறையுணவு, நுளம்புகளை அழிப்போம், புழு காத்திருக்குது, நெருப்புக் காய்ச்சல், சாலை விதிகளை மதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இச்சிறுவர் பாடல்களை மருத்துவபீட மாணவர்களான ல.யனோஜினி, ந.தனஞ்சயன், சே.வரண்பிரசாந், ச.மணிவண்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்நூலுக்கான படங்களை சி.பிரதீபன் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

13241 நக்கீர தேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), நவாலியூர் வை.நல்லையா (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17873 நெஞ்சில் நிறைந்த அறிஞர்கள்.

இராசி. ஜெயபதி. சென்னை 4: கலைமகள் பப்ளிகேஷன்ஸ், 34/2, வீரபத்ரன் தெரு, மயிலாப்பூர், 1வது பதிப்பு, மே 2023. (சென்னை 14: ரத்னா ஆப்செட்). xiv, 118 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா

17114 ஈழத்து மனையடி சாஸ்திரம்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: தி.தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). xii, 200 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: