செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராபிக்ஸ், இல. 54, இராஜேந்திரா வீதி).
xii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-4609-01-3.
அருட்தந்தை அன்புராசா அடிகளார் பாடிய 35 சிறுவர் இலக்கியப் பாடல்களைக் கொண்ட இத் தொகுதியில் உள்ள பாடல்கள் சிறுவர்களின் உலகை மகிழ்வூட்டுவதாயும் அவர்களினடையே நேர்மறைச் சிந்தனையை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் ஆளுமைத் திறன்களை வளர்ப்பதாகவும் அமைந்துள்ளன. மனிதத்தையும் மனித விழுமியங்களையும், பக்தி, கலை, பண்பாடுகளையும் மேம்படுத்தும் நோக்கில் இப்பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எளிய சொற்களில் அமைந்த இப்பாடல்கள் சிறுவர்கள் பாடியும் ஆடியும் மகிழ்ந்து மனத்தில் இருத்;தக்கூடியவகையில் இருப்பது இப்பாடல்களின் சிறப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62075).