13576 சிறுவர் கவிப்பாக்கள்.

அருளானந்தம் சுதர்சன். பத்தரமுல்லை: தாய்நாட்டின் மரபுரிமை பிள்ளைகளுக்கே-நிகழ்ச்சித் திட்டம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, 1வது பதிப்பு, 2018. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டத்தாபனம், பானலுவ).

iv, 28 பக்கம், சித்திரங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-9117-44-5.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் 2018. இந்நூலின் பதிப்பாசிரியராக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுபாசினி கேசவன் பணியாற்றியுள்ளார். இந்நூலில் பக்குவமாய் பாடசாலை செல்வோம், நன்மை தரும் காகம், சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து விடுபடுவோம், பயன்தரும் தென்னை மரம், பாலர் ஆத்திசூடி, பண்டிகைகள், பிராணிகளிலும் நற்குணமறிவோம், தங்கத் தாத்தா சூரியன், இரவு வானம், இலங்கை நாடு, நீர்வீழ்ச்சி, புதிய பாப்பாப் பாட்டு, மரம் வளர்ப்போம், டெங்கை ஒழிப்போம், காகம் விரட்டிய பாட்டி, மாட்டு வண்டி ஆகிய 16 பாடல்கள் அடங்கியுள்ளன.

ஏனைய பதிவுகள்

Casino Ohne Registration & Kontoverbindung

Content Spielsaal Exklusive Registration: Werden Ebendiese Casinos Vertrauenswürdig & Unter allen umständen? Spielerschutz Sie hatten das ident breites Spektrum eingeschaltet Games, entsprechend in klassischen Netz-Spielbanken

11417 கணிதம் 10-2.

நா.சுந்தரலிங்கம், சி.பரமநாதன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், புதிய செயலகம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர்; 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). 266 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. கல்வி