நா.மகேசன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-1997-53-3.
இந்நூலில் ஒளவையார் அருளிச்செய்த ‘ஆத்திசூடி” யில் வரும் 108 அறநெறிக் கருத்துக்களில் தேர்ந்த 21 அறநெறிகளை விளக்கும் சிறுவர் கதைகளை எழுதித் தொகுத்து வழங்கியிருக்கிறார் தமிழறிஞர் நாகலிங்கம் மகேசன் (1933) அவர்கள். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரியில் கற்றுத்தேர்ந்து அரச கணக்காளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் இவர் இலங்கை வானொலியில் வானொலி மாமாவாக பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் சுமைதாங்கி, ஒட்டு மாங்கன்று, பறந்தது கோழி, பலாப்பழம், இசைக் கச்சேரி, வெகுமதி, நன்னான்கு பதினாறு, புல்லுச் சத்தகம், நல்ல பாடம், குண்டு வீச்சு, என் கதை, மாறாட்டம், விதைநெல், கிளிக்குஞ்சு, மக்கள் தொழிற்சாலை, இயந்திரக் கலப்பை, தீப்பெட்டி, வாடகைக்காரர், தொலைந்த முதல், கெட்ட குமாரன், முடிச்சு மாறிகள் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல் 054ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.