செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-7461-03-8.
நீதிக்கதைகள், துணிகரச் சம்பவங்கள் கொண்ட கதைகள், மர்மக் கதைகள், யதார்த்தக் கதைகள், அறிவியற் கதைகள், வாய்மொழிக் கதைகள் எனப் பல்வேறு வகையிலும் அமைந்த இச்சிறுவர் கதைகள் ஈழத்து இலக்கியவாதிகளால்; எழுதப்பட்டவை. தங்க மயில் (சபா.ஜெயராஜா), நன்றி மறவேல் (பொ.கனகசபாபதி), குணம் மாறாத காகம் (சந்திரா தனபாலசிங்கம்), மைனாக் கூட்டமும் சருகாமையும் (இராசவல்லான் இராசயோகன்), மாலை நேர மர்மக் கிழவன் (மாஸ்டர் சிவலிங்கம்), ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூலுக்கான சித்திரங்களை கௌசிகன் வரைந்துள்ளார். இந்நூல் 104ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.