யோகா யோகேந்திரன். திருக்கோவில்: யோகா யோகேந்திரன், யோகவாசா, 1வது பதிப்பு, 2002. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட் அச்சகம்).
90 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 20.5×14.5 சமீ.
பெரும்பாலும் பள்ளிச் சிறுவர்களையே கதாபாத்திரங்களாகக் கொண்டு புனையப்பட்ட 20 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியரின் சிறுவர் இலக்கியத்துக்கான முதல் முயற்சி. இதில் சிறந்த நண்பர்கள், சிறுவர் உரிமைகள் தெரியுமா?, மனமாற்றம், உண்மை நட்பு, புத்திசாலிச் சிறுவர்கள், அருமைச் சிறுவன் அன்ஸார், அர்த்தமுள்ள சிரிப்பு, சுரேனின் குருவி வேட்டை, படிக்கும் காலம், சாந்தனின் கல்விச் சுற்றுலா, மாலனின் சாதுரியம், சில்வெஸ்டரின் நல்ல மனசு, வீரச் சிறுவன், இது தப்புத்தானே?, வேகமும் விவேகமும், ஒற்றைரோஜா, நல்ல சிந்தனை, தவறான வழிகாட்டல், யார் திருடன், ஏழையாயிருப்பது தப்பா? ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 034235).