13613 குறும்புக்கார ஆமையார்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2009. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×21 சமீ., ISBN: 978-955-8715-60-4.

குறும்புக்கார ஆமையார் என்ற இச்சிறுவர் நாவல், அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படும் ஆமையொன்றின் கதையைக் கூறுகின்றது. மற்றவர்கள் மகிழ்வுடன் வாழத் தன்னை அர்ப்பணித்து வாழும் அந்த ஆமையின் புகழில் பொறாமை கொண்ட முயலொன்று அதனை வீழ்த்துவதற்கு எடுக்கும் முயற்சிகளும் அவை ஒவ்வொன்றையும் ஆமையார் சாதுர்யமாக வெற்றிகொள்ளுதலும் பல நிகழ்வுகளினூடாக இக்கதையில் வளர்த்துச் செல்லப்படுகின்றன. அனைவரும் அறிந்துள்ள ஆமையும் முயலும் கதையின் மற்றொரு பரிமாணமாகவும், அதன் பரிணாமமாகவும் இதனைப் பார்க்கமுடிகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை சுசிமன் நிர்மலவாசன் வரைந்துள்ளார். இந்நூல் 56ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Spielbank Provision Ohne Einzahlung 2024

Content Wie gleichfalls erkenne selbst ihr seriöses Angeschlossen Kasino? Yoju Kasino: 2.000 € Bonus, wenn 225 Freispiele Spiele Gargantoonz via 30 Freispielen inoffizieller mitarbeiter Erfolg