13616 பறக்கும் ஆமை (பார்வையற்ற சிறுவர்களுக்கான இறுவட்டுடன்).

 ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

36 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 400., அளவு: 18.5×21.5 சமீ., ISBN: 978-955-8715-66-6.

இலகுவான சொற்கள், சிறிய சிறிய வசனங்கள், காட்சிப் படுத்துவது போன்ற வாக்கியங்கள், ஆற்றொழுக்குப் போன்ற நடை, கற்பனை வளம், போதிக்காமல் போதிக்கும் முறை என்பன நூலாசிரியர் ஓ.கே.குணநாதனுக்கு நன்கு கைவந்துள்ளன. பறக்கும் ஆமை என்ற இக்கதை கொக்குகளும் ஆமையும் என்ற பழைய கதையொன்றைப் புதிய முறையிலும் புதிய முடிவோடும் கூறுகின்றது. இதில் ஓர் ஆமைக் குடும்பமே வருகின்றது. பழைய கதையில் கொக்குகளால் தூக்கிவரப்படும் ஆமை வாயைத் திறந்ததால் கீழே விழுந்து நொறுங்குகின்றது. இது சிறுவர் மனதில் மனப்பிறழ்ச்சியை  ஏற்படுத்தும் என உணர்ந்த ஆசிரியர் ஆமைகளை இக்கதையில் இறக்கவிடவில்லை. ஆமைகள் தப்பிக்கின்றன. அவை குளத்தில் விடப்படுகின்றன. மாணவர்களால் பாதுகாக்கப்படுகின்றன. அன்பு, ஜீவகாருண்யம், மனிதாபிமானம், என்ற பல விடயங்களை போதனையாகவன்றி கதையினூடாகவே சொல்லப்படுகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை சுசிமன் நிர்மலவாசன் வரைந்துள்ளார். இந்நூல் 60ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்