உ.நிசார் (இயற்பெயர்: H.L.M. நிசார்). மாவனல்லை: பானு வெளியீட்டகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2018. (மாவனல்ல: யுனிக் ஓப்செட் பிரின்டர்ஸ், ஹஸன் மாவத்தை).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 26.5×20 சமீ., ISBN: 978-955-0503-14-8.
9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்குப் பொருத்தமான நூல். ஆனிஷ் என்னும் சிறுவனும் அவனது நண்பன் ஆக்கில் என்பவனும் கார்ட்டூன் கதையொன்றை வடிவமைக்கிறார்கள். ஆனிஷின் தந்தை அவர்களது கதையை நெறிப்படுத்துகிறார். உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம், முகம்மது நபி அவர்களுடைய வரலாற்றைக் கூறும் நூல். அதன் அடிப்படையில் அமைந்த வரலாற்றுத் தகவல்களைப் பொதித்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதநம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் இதன் கதைப்போக்கு அமைகின்றது.