ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2014. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).
20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×21.5 சமீ., ISBN: 978-955-8715-95-6.
காட்டில் மிருகங்களை வேட்டையாடி வந்த ஒரு சிங்கத்தை புத்திசாலித்தனமாகப் பிடித்து அடிக்கும் நரியார், அச்சிங்கத்தின் இரண்டு பிள்ளைகளும் பின்னர்; வருந்துமே என்பதற்காக சிங்கத்தைக் கொல்லாது விடுகின்றது. சிங்கம் தவறை உணர்ந்து அந்தக் காட்டை விட்டு அவமானத்துடன் வெளியேறுகின்றது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 86ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.