உ.நிசார். மாவனல்லை: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மாவனல்லை: பானு பதிப்பகம்).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0503-02-5.
சிறுவர்களின் வாசிப்புக்கேற்ப பெரிய எழுத்தில் வண்ணச் சித்திரங்களுடன் வெளிவந்துள்ளது. இவ்விரண்டாம் பாகம் திகிலான சில சம்பவங்களுடன் நகர்த்தப்படுகின்றது. அன்னப் பறவையின் உதவியுடன் குகைவாயிலை அடைகிறார் மந்திரவாதி குணசாமி. சிங்காரி என்ற மரப்பாச்சியின் உதவியுடன் அவர் கணையாழியைக் காவல்காத்த மூன்றுதலை நாகங்களின் பாதுகாப்பினை உடைத்தெறிந்து குகையினுள் சென்று பீடத்தில் படுத்திருந்த அசுரனின் கையிலிருந்த முத்துக் கணையாழியைப் பெற்றுத் திரும்புகின்றார். தனக்கு எதிராக வந்த தனசாமி, தம்பிசாமி ஆகியோரை அடிமைகளாக்கி சுதந்திரமாகப் பெரிய மாளிகையில் வாழ்வதாக கதை முடிக்கப்படுகின்றது. கைகால்களில் விலங்கிடப்பட்ட தனசாமிக்கு என்ன நடந்தது? நாயுருவில் நின்ற பூதம் தம்பிராசா குணசாமியிடம் நன்றியுடன் நடந்துகொண்டதா? முத்துக்கணையாழி தொடர்ந்து குணசாமியின் வசம் இருந்ததா? குணசாமியின் ஆயுள் எவ்வளவு காலம் நீடித்தது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இரண்டாம் பாகத்தில் விடை தராமல், அதனை அடுத்த மூன்றாம் பாகத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.