ஏ.என்.டோல்ஸ்டோய். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
8 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-1997-69-4.
இச்சிறுவர் கதை நூலுக்கான ஓவியங்களை எவ்ஜெனி ராசேவ் என்ற ரஷ்ய ஓவியர் வரைந்துள்ளார். மரத்தில் கூடுகட்டி நிம்மதியாக வாழ்ந்த கருங்குருவியையும் அதன் குஞ்சுகளையும் தனக்கு இரையாக்க வந்த நரியையும் பற்றிய கதை இது. நரி தன் குஞ்சுகளைக் கவராதிருக்க, அதற்குப் பணியாரங்களும், தேனும், பானமும் கிடைக்க வழிவகை செய்த கருங்குருவியை மேலும் தொந்தரவு செய்கின்றது நரி. இறுதியில் தானே வேட்டைக்காரர்களிடம் தனது வாலைக் கொடுத்து மாட்டிக்கொள்கின்றது. இந்நூல் 071ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.