13635 பயமோ பயம்: கிராமியக் கதை.

சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-59-5.

ஒரு மேளகாரரும் நடனக்காரரும் திருவிழா ஒன்றுக்காக தொலைதூரக் கிராமத்துக்குச் செல்கிறார்கள். காட்டுப்பாதையின் நடுவில் கிடந்த பெருங்கல்லொன்றை யானையாகக் கண்டு பயந்து போகிறார்கள். அசையாமல் நிற்கும் யானையை துரத்துவதற்காக அவ்விடத்தில் இருவரும் இரவிரவாக மேளமடித்து நடனமாடத் தொடங்குகின்றார்கள். யானை நகர்வதாக இல்லை. களைத்துத் தூங்கிப்போன இருவருக்கும் விடிந்தபின்தான் உண்மை தெரிந்தது. தம்மைத்தாமே நகைத்தபடி திருவிழாவுக்குச் செல்கிறார்கள். இந்நூல் 061ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17798 வெள்ளி. ஜே.கே. (இயற்பெயர்: ஜெயக்குமாரன் சந்திரசேகரம்).

யாழ்ப்பாணம்: வெண்பா பதிப்பகம், 20A, யாழ். இந்துக் கல்லூரி அருகாமை, 1வது பதிப்பு, ஆவணி 2023. (அச்சக விபரம் தரப்படவில்ல). 152 பக்கம், விலை: ரூபா 4189.50, அளவு: 24×16.5 சமீ. 2023 ஆண்டில்