சிபில் வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-63-2
கஜு பழத்தின் உருவம் எப்படி ஏற்பட்டது என்பதை சுவையாக விளக்கும் கதை. தடித்தவனும் வெள்ளை நிறத்தவனுமான பெரியசாமியையும், கறுத்து மெலிந்தவனான சின்னச்சாமியையும் பாத்திரங்களாகக் கொண்டு, அவர்கள் பழங்களை வாங்கக் கூடையுடன் அயல்கிராமம் சென்று திரும்பும்போது, ஒருவர் மேல் ஒருவர் ஏறியபடி திரும்பிவந்து இறுதியில் மரமொன்றில் தொங்கிக்கொண்டதாகவும் அவர்களே பின்னர் கஜுப்பழங்களாக மாறியதாகவும் கதை நகைச்சுவையாகச் சொல்லப்படுகின்றது. இந்நூல் 065ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை ஓவியர் சூரிய வெத்தசிங்க வரைந்துள்ளார்.