இலக்கியன் வெளியீட்டாளர். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-73-1.
ஒரு ஊரில் இருந்த மூன்று சகோதரர்களின் கடைசித் தம்பியான டேவிட் ஆற்றில் மீன் பிடிக்க அண்ணிமாரால் அனுப்பப்படுகின்றான். அங்கு அவன் பிடித்த ஒரு வாளை மீன் தன்னை மீண்டும் உயிருடன் விடுவித்தால் டேவிட்டுக்கு ஒரு மந்திர சக்தியை வழங்க ஒப்புக்கொள்கிறது. அதன்படி ‘வாளையின் சட்டம் எந்தன் இஷ்டம்’ என்ற மந்திரச் சொல்லை அவன் உச்சரித்ததும் அவன் கேட்டவை எல்லாம் கிடைக்கலாயிற்று. அந்த மந்திரச்சொல்லால் அவன் அடையும் கீர்த்திகள், எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பவை சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்திச் செல்கின்றன. இறுதியில் சார் மன்னனின் மகளையே மணந்து தனித்தீவொன்றில் புதியதொரு அரண்மனையில் குடியேறுவதாக கதை முடிகின்றது. இந்நூல் 075ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.