சகிலா குமரன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-7461-30-4.
பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசஸ் (borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை. இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 முதல் 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். தமிழர் வாழ்வில் பனை மிக முக்கியமான இடத்தினைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக இலங்கையின் வடபிரதேசத்தில் முக்கிய வாழ்வாதாரமாக பனை இருக்கிறது. பனை பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை வண்ணப் புகைப்படங்களின் உதவியுடன் இந்நூல் சிறுவர்களுக்கேற்ற வகையில் வழங்குகின்றது. இந்நூல் 131ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.