தமிழவேள் (உரையாசிரியர்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1979. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
(3), xii, 80 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ.
சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணத்தில் உள்ள காரைக்கால் அம்மையாரின் புராணம் இதுவாகும். திருத்தொண்டர் புராண நூல் வரலாறு, புராண பெருங்காப்பிய அமைப்பு, திருத்தொண்டர் புராண நூல் ஆசிரியர் வரலாறு, காரைக்காலம்மையார் வரலாறு, ஆகிய தகவல்களை முதலில் வழங்கியுள்ள ஆசிரியர், தொடர்ந்து இந்நூலில் காரைக்காலம்மையார் புராணத்தின் மூலத்தையும் அதற்கான உரைக்குறிப்பையும் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து வரும் பகுதிகளில், இந்நூலால் அறியப்பெறுவன, வினாக்கள் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14370).