ஹாயத்திரி சண்முகநாதன். கொழும்பு 12: கலாநிதி ஏ.யோகராஜா, லோயல் பப்ளிக்கேஷன்ஸ், இல. 125, புதிய மூர் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கொழும்பு 12: லோயல் அச்சகம், இல. 125, புதிய மூர் வீதி).
(4), 120 பக்கம், தகடுகள், விலை: ரூபா 250.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7732-58-9.
க.பொ.த. உயர்தர வகுப்புகளில் சகல பாடங்களுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான ‘செய்யுள் தொகுப்பு’ எனும் தலைப்பில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சங்ககாலம் தொடக்கம் தற்காலம்வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை க.பொ.த. உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்கள் இலகுவில் விளங்கிக்கொள்வதற்கும், அதிகளவு புள்ளிகளை பெறுவதற்கும் ஏற்றவாறு இந்நூலானது ஆக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பாடல் பகுதிகள், பதப்பிரிப்புகள், கொண்டு கூட்டல், விளக்கங்கள், பரீட்சையினை எதிர்கொள்வதற்குரிய வினா-விடைகள் என்பன உள்ளடங்கலாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் சங்கச் செய்யுள்களில் குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என்பனவும், சிலப்பதிகாரத்தில் ஊர்காண் காதையும், திருவாசகத்தில் கோவில் திருப்பதிகமும், திருப்பாணாழ்வாரில் அமலனாதிபிரானும், தேம்பாவணியில் காட்சிப்படலமும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62584).
செய்யுள் தொகுப்பு-தரம் 12: க.பொ.த. (உயர்தரம்).
ஹாயத்திரி சண்முகநாதன். யாழ்ப்பாணம்: ஹாயத்திரி சண்முகநாதன், 296 ஏ, நாவலர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை: இன்பக் சொலியூஷன்).
(4), 410 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-99859-0-2.
2017இல் வெளியிடப்பட்ட நூலில் காணப்படும் முதல் ஐந்து பாடங்களுடன் மேலதிகமாக திருக்குறள் (அறிவுடைமை, குற்றங் கடிதல், பெரியாரைத் துணைகோடல், சிற்றினஞ் சேராமை, தெரிந்த செயல்வகை, வலியறிதல்), கம்பராமாயணம் (குகப் படலம்- கங்கைகாண் படலம்), கவிதைகள் (பாரதியார் பாடல்கள்-குயிற்பாட்டு, கண்ணம்மா என் காதலி, பெண் விடுதலை, பாஞ்சாலி சபதம், ஈழநாட்டுக் குறம், பாரதியார்) ஆகிய மூன்று பாடங்களுமாக மொத்தம் எட்டுப் பாடங்கள் இப்புதுக்கிய பதிப்பில் இடம்பெற்றுள்ளன.