நா.பொன்னையன் (ஆசிரியர்). சுன்னாகம்: ஈழகேசரி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1938. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை).
(10), 134 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.
ஈழகேசரி ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிக முக்கியமானது. 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஈழகேசரியின் 1938ஆம் ஆண்டுக்குரிய சிறப்பிதழாக இவ்வாண்டு மலர் வெளிவந்துள்ளது. இதில் இளங்கோவடிகளும் கம்பரும் (சி.கணேசையர்), தமிழர் காலைப் பாட்டு (சுத்தானந்த பாரதியார்), புரவலரும் புலவரும் (ரா.பி.சேதுப்பிள்ளை), துறவிகளின் பெருமை (நாமக்கல் வெ.இரமலிங்கம்பிள்ளை), இயற்கையின்பம்-ஆடுகள் (எஸ்.உமைதாணுப்பிள்ளை), திராவிட சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம்), விண்ணுலகம் (சுவாமி விபுலாநந்தர்), சிலேடை (மு.செல்லையா), இராசயோகம் ( ஸ்ரீலஸ்ரீ அருட்குரு ஞானபூபதி), இலக்கணக்கொட்டர் (தி.சதாசிவ ஐயர்), அன்பு மாலை (சுத்தானந்த பாரதியார்), யப்பானியரின் தொழிற்கல்வி (இராணி பவுல்), ஆயுள்வேத வைத்தியம் (விஜயலட்சுமி பண்டிட்), வாழ்க்கைக் கலை (செ.சின்னத்தம்பி), எனது யப்பான் யாத்திரை (ச.பேரின்பநாயகன்), நவநவக்கிரக நாடகம் (தூமகேது), கதாகளி (சோ.சிவபாதசுந்தரம்), மேல்நாட்டவரோடு பண்டைக்காலத்தில் தமிழர் செய்த கடல் வாணிகம் (க.கணபதிப்பிள்ளை), ஈழகேசரியே (மு.செல்லையா), தமிழ்மொழிக்கு புதுமலர்ச்சி (ஆர்.சரவணமுத்து), இலங்கைச் சிவாலயங்கள் (W.பாலேந்திரா), பாரதியும் சொக்கனும் (வே.சிவக்கொழுந்து), உண்iயான வெற்றி எது? (கலாசேகரர்), நவபாரதம் (சாதேவ சாஸ்திரியார்), தலைவன் தந்த தமிழ் (நம சிவப்பிரகாசம்), ஐரோப்பாவில் திராவிடரின் ஆதிக்குடியேற்றம் (வண. சுவாமி ஞானப்பிரகாசர்), வேண்டுகோள் வெண்பா (செ.சீனித்தம்பி), அந்தக் குறும்பன் (சுயா), விகடம் (ளு.யு.), இயக்கர் (குல. சபாநாதன்), இஸ்லாத்தின் தத்துவமும் அதன் இலட்சியமும் (M.S.M.புகாரி), தமிழ் வாழ்த்து (சுத்தானந்த பாரதியார்), மரணமும் மறுமையும் (ச.மு.), சீனிக் கட்டாடி (சுயா), பண்ணுலாவும் பைந்தமிழ்ப் பாக்கள் (ஆ.சு.சேதுராமன் செட்டியார்), புத்தகங்களின் போர் -சிலந்தியும் தேனீயும் (கா.பொ.இரத்தினம்), அத்துவக்காத்து நிக்கலஸ் கோற்றியர் கூல்ட் (மு.இராமலிங்கம்), நிகழ்பவை யாவும் கால நிகழ்வே (க.வேலுப்பிள்ளை), அம்மானை (எஸ்.உமைதாணுப்பிள்ளை), பெண்மையின் உத்தம சக்தி (மா.மங்களம்மா), பெண்மக்கள் விலங்கு (த.வேதநாயகி அம்மையார்), ஐந்து சித்திரங்கள் (நாகர்கோவில் எஸ். கிருஷ்ணன்), மும்மாத்திரைகள் (சோ.சொர்ணவடிவேல்), நாமகள் தசாங்கம் (வ.பரமேசுவரியார்), பத்திரிகைப் படிப்பு (சு.இராமசுவாமி), நான் தான் அத்துரோகி (சுயா), யாழ்ப்பாணத்துப் பிரபல அப்புக்காத்து (அநு-சுயா), விலங்குகளின் சட்டசபை (வால்), ஈழகேசரி இளைஞர் சங்கம் (தாத்தா-பாட்டி), சினிமா உலகம் (புதுமைப் பித்தன்) ஆகிய ஐம்பது படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.