13650 கலைப் பூங்கா 1963(1).

ஆ.சதாசிவம், சோ.இளமுருகனார் (இதழாசிரியர்கள்). கொழும்பு 7: இலங்கைச் சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, சித்திரை 1963. (யாழ்ப்பாணம்: வனிதா அச்சகம், மூன்றாம் குறுக்குத் தெரு).

80 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 23.5×15 சமீ.

கலைப்பூங்கா இதழ் இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960 ஆம் ஆண்டில் இருந்து வெளியீடு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தடைப்பட்டு 1963முதல் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்பட்டது. 1963இல் முதலாவதாக வெளிவந்துள்ள இவ்விதழில் செந்தமிழ் (ஆசிரியர் கருத்து), தெய்வப் புலமை (சு.நடேசபிள்ளை), உள்ளுறையுவமையும் இறைச்சியும் (ந.சுப்பையாபிள்ளை), ஈழநாட்டிற் செய்யுள் வளர்ச்சி (க.செ.நடராசா), தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகள் (ஆ.சதாசிவம்), மனவோசை (க.சச்சிதானந்தன்), சிறுகதை இலக்கியம் (க.தி.சம்பந்தன்), அன்னம் பாறல் (வாவு முகமது), ஐங்குறுநூறு (சோ.இளமுருகனார்), மட்டக்களப்பு நாட்டுக்கூத்து (செ.பூபாலபிள்ளை), உலாப் பிரபந்த வளர்ச்சி (பொ.பூலோகசிங்கம்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000691).

ஏனைய பதிவுகள்