இரா.சுப்பிரமணியம் (இதழாசிரியர்). நுவரெலியா: இந்து கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, 1997. (ஹட்டன்: பிரின்ட் டெக், 69, சேக்கியூலர் வீதி).
(116) பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: 25×17.5 சமீ.
இந்நூலின் இணையாசிரியர் குழுவில் சு.இரவிச்சந்திரன், இரா.இராஜாராம், ந.லோகேஸ்வரன், பீ.சந்திரமோகன் ஆகியோர் இயங்கியுள்ளனர். இந்நூல், சுவாமி ஆத்மகனாநந்தாஜி, ஆர்.கே.முருகேசு, அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி ஆகியோரின் ஆசிச் செய்திகளுடனும், வி.புத்திரசிகாமணி, முத்து சிவலிங்கம், பன்துல செனவிரத்ன, எல்.நேருஜி, வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளுடனும் தொடங்குகின்றது. தொடர்ந்து பேரவை நிர்வாகிகளின் உரைகளும் அறிக்கைகளும் இடம்பெறுகின்றன. தொடர்ந்து வரும் ஆக்கங்களாக, சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜய நூற்றாண்டை ஒட்டி நடைபெற்ற முத்திரை வெளியீட்டு விழாவுக்கான சிறப்பு மலர், யார் இந்த விவேகானந்தர் (பிரகலாதன்), இந்திய மெய்யியல் – சாங்கிய தர்சனம் – (மல்லிகா இராசரத்தினம்), உயர்ந்த மலைகளில் உயராத மலையகம்-கவிதை (எம்.எஸ்.பரமேஸ்வரன்), ஏற்றம் காணும் பெண்ணினமே-கவிதை (ப.ரூபதர்ஷினி), மலையகமே எழுந்திரு-கவிதை (கா.பிரதீபன்), அக்கரைகள் பச்சையில்லை- சிறுகதை (ரோகினி முத்தையா), ர்iனெரளைஅ ரூ ர்ரஅயn டகைந (சண்முகநாதன்), ஓர் இந்துவின் சிந்தனைக்கு….(சு.வேல்ராஜ்), கீதையில் கிருஷ்ண பகவான் (கீதைப் பிரியன்), மோஷலோக உதயம் ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24835).