யோகேஸ்வரி துரைப்பாண்டி. டிக்கோயா: செல்வி யோகேஸ்வரி துரைப்பாண்டி, கேசவன் பதிப்பகம், 73, லோவர் ஸ்டான்ட்ரூஸ் பிளேஸ், 333, 335 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (திருச்சி 2: அனுஷா பிரின்டர்ஸ், 28, சின்னக்கடை வீதி).
(88) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட யோகேஸ்வரி அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவியாவார். தற்போது மலையகத்தில் ஆசிரியராகவுள்ளார். இவர் சிறுவயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்டு தனது பல படைப்புகளை ஈழத்தின் முன்னணி பத்திரிகைகள் உட்பட பல சிறுசஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். பல இலக்கியப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசில்களை வென்றுள்ளார். அவரது தெரிவுசெய்யப்பட்ட மலையகக் கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31393).