நிவேதா நிவேதிகா (இயற்பெயர்: நிவேதா துரைசிங்கம்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
100 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-35941-0-5.
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நிவேதா துரைசிங்கம். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரி. தன்னுணர்வுக் கவிதையில் அதிக நாட்டமுடைய இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இது. தான் சார்ந்த சமூகத்தின் இயல்புகள் மற்றும் வலிகளை மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லும் நோக்குடன் முகநூல் போன்ற பொது வெளியில் பயணித்துவந்த இவரது கவிதைப்பயணம் அமைந்துள்ளது. ‘தாய் மடி’ முதல் ‘வெற்றிபெற்ற எனது ஹைக்கூ’ ஈறாக இத்தொகுப்பிலுள்ள 54 கவிதைகளிலும் மென்மையான காதல் இருக்கின்றது. தான்சார்ந்த சமூகம் இருக்கின்றது. இன்றைய சமகால அரசியல் இருக்கின்றது. குடும்ப உறவு இருக்கின்றது. சொந்தப் பிரச்சினைகளும் இருக்கின்றன. அனைத்தும் இந்நூலில் சுவையாகப் பதிவுபெறுகின்றன.