செ.குணரத்தினம் (ஆசிரியர்), உமா ஸ்ரீசங்கர் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கவிஞர் செ.குணரத்தினம், 3ஆம் குறுக்குத் தெரு, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2012. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).
(5), 150 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-74-1.
மட்டக்களப்பு மட்டிக்கழியைப் பிறப்பிடமாகவும், அமிர்தகழியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் செ.குணரத்தினம் 40 ஆண்டு காலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருபவர். பல கவியரங்குகளில் தலைமைதாங்கியும், பங்கேற்றுமுள்ள இவர் அமிர்தகழியான் என்ற புனைபெயரிலும் நகைச்சுவைக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52076).