பாரதிபாலன் (இயற்பெயர்: குமாரசாமி ஜெயக்குமார்). தமிழ்நாடு: பகவான் பதிப்பகம், 20D, தாமஸ் காலனி, எஸ்.எஸ்.காலனி, மதுரை 16, 1வது பதிப்பு, 1990. (மதுரை 625001: தி மொடர்ன் பிரின்டர்ஸ், 184, தெற்கு மாசி வீதி).
(14), 88 பக்கம், விலை: இந்திய ரூபா 15.00, அளவு: 18×12.5 சமீ.
கவிவேளம் பாரதிபாலன் திருக்கோணமலையை பிறப்பிடமாகக்; கொண்டவர். டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழும் இவர் ஈழத்து மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர். டென்மார்க்கின் புகழ்பெற்ற எழுத்தாளரான ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சனின் ஒரு சின்ன கடற் பெண் (The Little Mermaid) என்ற காவியத்தை தமிழில் ‘கடற் கன்னி காவியம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வழங்கியவர். இவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக உதவித் தலைவர்களுள் ஒருவராகவும் மேற்படி தமிழியல் இயக்கத்தின் ஸ்கன்டிநேவிய நாடுகளின் அமைப்பாளராகவும் தன் சேவையை ஆற்றி வருகின்றார். பாரதிபாலனின் கவிதைகளைக் கொண்ட இந்நூல் 1992இல் இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாண அரசின் சாஹித்திய மண்டலப் பரிசுபெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 80478).