எஸ்தர். சென்னை 600014: போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, மார்ச் 2018. (சென்னை 600 005: அண்ணாமலை பிரின்டர்ஸ்).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-80690-54-4.
எஸ்தர் மலையகத்தில் அட்டன்-டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். அட்டன் ஹைலன்ட் கல்லூரியில்ஆரம்ப உயர்கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில்அரசறிவியல் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கல்வியையும் பெற்றவர். கால் பட்டு உடைந்தது வானம் இவரது முதலாவது கவிதைத் தொகுதி. இக்கவிஞர் பார்க்கின்ற வானம் சிவந்திருக்கிறது மலையக மக்களின் குருதியைப் போல. மழையிலோ கண்ணீரின் உப்புக் கரிக்கின்றது. நிலவில் கிரகணங்கள் சூழ்ந்திருக்கின்றன. பறிபோன உயிர்களின் வலி சொற்களில் உறைந்து கிடக்கின்றன. அனாதையான தேசத்தின் ஏக்கங்கள் பெருமழையாய் கவிதைகளின் இடையிடையே கொட்டித் தீர்த்தபடியிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062996).