13687 தம்பியார் (கவிதைகள்).

அஸாத் எம்.ஹனிபா. தெகிவளை: ஆ.ர்.ஆ.அஸாத், 48/5 ஏ, ஆசிரி மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

(18), 180 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-955-54758-2-2.

வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டவர். இது ஆசிரியரின் மூன்றாவது கவிதை நூல். இவரது கவிதை வீச்சு வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர் இவர். கனிந்த இதயமும் குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார். இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்திக்க வைப்பவையாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின் போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. இவரது கவிதைகள் மானுடம் என்ற அடித்தளத்தில் நின்றபடி கேள்விகளை எழுப்புகின்றன. அவை வில்பத்துக் குறித்துப் பேசும் அதே வேளை மியன்மார் அகதிகள் குறித்துப் பேசுகின்றன. அம்பாறைக் கலவரம் குறித்துப் பேசும் அதே வேளை சிரியா குறித்துப் பேசுகின்றன. புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் பற்றிப் பேசும் அதே வேளை காஷ்மீர் கோவிலுக்குள் சிதைக்கப்பட்ட சிறுமி பற்றிப் பேசுகின்றன. தம்புள்ளைப் பள்ளி பற்றிப் பேசும் அதே வேளை ஜெரூசலம் பற்றிப் பேசுகின்றன. காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் பற்றிப் பேசுகின்றன, முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுகின்றன. துரத்தப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிப் பேசுகின்றன. தேசிய அரசியல், சிறுபான்மை அரசியல் பற்றிப் பேசுகின்றன. ஹலால் பிரச்சனை பற்றியும் ஹபாயா பிரச்சனை பற்றியும் பேசுகின்றன. இந்நூலிலுள்ள  77 கவிதைகளிலும் குறைந்தது 66 விடயங்கள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு செய்தி இருக்கிறது. சமூக, தேசிய, சர்வதேசிய மனிதாபிமானப் பார்வையுடன் அவர் எழுந்து நிற்கிறார்.

ஏனைய பதிவுகள்