13688 தயாளனின் குறும்பாக்கள்.

மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மகுடம் வெளியீட்டகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, மே 2018. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

xx, 172  பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-4041-10-3.

மேலைத்தேய கவிவடிவமான லிமரிக்ஸ் என்ற வடிவத்தை குறும்பாவாகத் தமிழுக்கு கொள்டுவந்தவர் மஹாகவி உருத்திரமூர்த்தியாவார். அதன் நீட்சியாக மு.தயாளனின் இக்குறும்பாக்கள் இடம்பெறுகின்றன. தயாளனின் குறும்பாக்கள் வெறுமனே அமைப்பு ரீதியாக மட்டும் புதுவடிவம் கொள்ளவில்லை. அதன் வெளிப்பாட்டுத் திறனிலும் சிந்தனைப் போக்கிலும் பாரிய வித்தியாசத்தை உணர்த்தி நிற்கின்றன. சீதனம், சாதிக் கட்டமைப்பு, என சமூகப் பிரச்சினைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும், ஆன்மீக போதனைகளையும், மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்ட இதிகாச புராணங்களையும், ஈழப்போராட்ட காலத்தை கண்முன் கொண்டுவருவதிலும் ஆசிரியர் வெற்றிகண்டுள்ளார்.  இது மகுடம் பதிப்பகத்தின் 16ஆவது வெளியீடு. இலங்கையில் கரவைக்கவி என்ற பெயரில் கவிதகைள் எழுதி அறிமுகமாயிருந்த மு.நற்குணதயாளன், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னர் கரவை மு.தயாளன் என்ற பெயரில் தனது கவித்துவப் பணிகளைத் தெடர்ந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63761).

ஏனைய பதிவுகள்