13690 தனித்தலையும் பறவையின் துயர்கவியும் பாடல்கள்.

றகுமான்-ஏ-ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). கல்முனை: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 124A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை, மருதமுனை, 1வது பதிப்பு, ஜுன் 2007. (அக்கரைப்பற்று: நியு செலெக்ஷன்).

(12), 56 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.,ISBN: 978-955-50248-0-8.

இத்தொகுதியிலுள்ள 35 கவிதைகளில் பெண்ணின் இயலாமை, நிராசை, எதிர்கொள்ளும் சவால்கள், என்பன பேசப்படுகின்றன. இவரது கவிதைகளில் பெரும்பாலும் சிறுவர்களையும் பெண்களையும் நேசிக்கும் தன்மை காணப்படுகின்றது. முரண்பாடுகளால் வார்க்கப்பட்ட ஒரு சமூகத்தின் ஒழுங்கமையாத நிர்மாணத்துக்குள் நின்று அதன் வாழ்வை இயல்பாக எதிர்கொள்ள விடப்பட்ட இவர்களை விடுவிக்கும் விருப்பையும், ஏக்கத்தையும் ஜமீலின் கவிதைகள் வெளிக்காட்டுகின்றன. நினைந்தழுதல், நடத்தைகள், முதலாம் பிசாசின் நடத்தை, ஒரு ஊசித்தும்பியின் கேவல், அப்பாவின் மரணம் போன்ற கவிதைகள் கூரிய பார்வைகொண்டவையாக அமைந்துள்ளன. சிறிசுகள் என்ற ஒதுக்கப்பட்டவர்களின் ஆசைகளை அவர்கள்மீது சுமத்தப்படும் சுமைகளை சிறுவர்கள் பற்றிய இவரது கவிதைகள் பதிவுசெய்கின்றன. கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனைக் கிராமத்தில் பிறந்த அப்துல் றகுமான் அப்துல் ஜமீல் 1993ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்திற்கான தேசிய விருதைப் பெற்றவர். இவரது முதல் கவிதைப் பிரதியான இந்நூல் 2007 யாழ் இலக்கியப் பேரவையின் கவிஞர் ஐயாத்துரை விருதையும், தடாகம் இலக்கிய வட்டத்தின் கலைத்தீபம் விருதையும் பெற்றது.

ஏனைய பதிவுகள்