நஜ்முல் ஹூசைன் (மூலம்), நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் (தொகுப்பாசிரியர்). பத்தரமுல்லை: ஸல்மா பதிப்பகம், சிமாக் மஹால், இல. 3, ரிச்சட் டி சொய்சா ஊடகவியலாளர் வீடமைப்புத் திட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (தேவி பிரின்டர்ஸ். அச்சிடப்பட்ட ஊர் குறிப்பிடப்படவில்லை).
152 பக்கம், விலை: ரூபா 450.,அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-3694-00-3.
1992இல் ‘பனித்தீ’ என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்ட நஜ்முல் ஹ{சைன் தனது இரண்டாவது தொகுதியினை தனது துணைவியாரின் தொகுப்பு முயற்சியின் விளைவாக உருவான ‘நட்சத்திரக் கவிதைகள்’ வாயிலாக முன்வைக்கிறார். தனது கணவர் நூல் வெளியீட்டு விழாக்களிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் பிறரை வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. முதல் பிரதி ‘நிதி’ புரவலர் ஹாஸிம் உமர், கம்பளைதாசன் எனும் சாஹ{ல் ஹமீத், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி, முஸ்லிம் சேவையின் முதல் பணிப்பாளர் அல்ஹாஜ் வீ.ஏ.கபூர், இசைக்கோ நூர்தீன், மல்லிகை டொமினிக் ஜீவா, பல்துறை கவிஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா, மூத்த இலக்கியவாதி மு.பஷீர், பேரறிஞர் அண்ணா, சிவகுருநாதன் என்னும் பெருந்தகை, வானொலிக் குயில் இராஜேஸ்வரி சண்முகம், இரங்கல் கவிதை – கம்பளைதாசன், சமூகஜோதி ரபீக், இலக்கிய வித்தகர் மேமன்கவி, ஈழத்து இசைமுரசு கலைக்கமல், பன்னூலாசிரியர் மௌலவி காத்தான்குடி பௌஸ், பேச்சாளர் எம்.பீ.எம்.மாஹிர், பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக், ப்ரியநிலா உயன்வத்தை ரம்ஜான், எழுத்தாளர் போர்வை பாயிஸ் ஜிப்ரி, கவிஞர் மெய்யன் நடராஜ், சட்டத்தரணி இஸ்மாயில் பீ.மஆரிப், கவிஞர் எஸ்.ஜனூஸ், சிலாவத்துறை டாக்டர் ஏ.ஆர்.அஸீம், டாக்டர் ஸக்காப் முபாரக், கவிஞர் வெலிமடை ரபீக், எழுத்தாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ், நாவலாசிரியை வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா, கவிதாயினி மொரட்டுவை மஸீதா அன்சார், கவிஞர் கிராமத்தான் கலீபா, கவிதாயினி சுபாஷினி பிரணவன், முபாரக்-ரூபிய்யா தம்பதிகள், கவிஞர் ரஷீத் டிம்.றியாழ்-சரீஹா தம்பதிகள், தமிழகம் சமீர் ஹஸன் – ஜெஸ்மின் ஹாஜிரா தம்பதிகள் ஆகியோர் பற்றி எழுதப்பட்ட 34 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.