ச.வே.பஞ்சாட்சரம். அக்கராயன்: புலிகளின் குரல் வானொலி மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 2001. (கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம், 101, முருகன் கோவில் முன்வீதி).
(12), 72 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14 சமீ.
கரும்புலித் தெய்வீகம், தமிழே தமிழா, தாழ்ந்த தலை நிமிர, நகையாடிடத் தாழ்ந்தான், மறப்புலி மாவீரர், என் தேசம் மீட்கப்படும் வரை, அன்னை அருள் துணை கொண்டு, கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலின்றி, கண்ணிலே நீர் ததும்பக் கானக்குயிலே என்ன பாடுகின்றாய்?, இடுக்கண் இடுக்கண் படும், மோதி மிதித்துவிடு பாப்பா, பாரதிக்கோர் பா முடங்கல், விடுதலை என்பது வேண்டிப் பெறுவதன்று வென்றெடுப்பது, செந்தமிழ் மக்களே வாரீர், புதியதோர் உலகம் செய்வோம், சொந்தக் காலும் சுதந்திரமும், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விடிகிறது தமிழ் ஈழம், மக்கள் புரட்சி என்பது இதுதான், ஒளவைக்கொரு விழா, அன்னைக்குப் புலிவீரன் அன்பு மடல், தூரங்கள் சென்றவரே வாருங்கள் யாழ்ப்பாணம், மருந்தோ மாற்றூனோம்பும் உயிர்வாழ்க்கை, திலீபன் இட்ட தீ, விடியலுக்கில்லைத் தூரம், மடைமையைக் கொளுத்துவோம், நெஞ்சில் குடியிருக்கும் நினைவுகள், இன்னும் எத்தனை நாட்கள், நாவலர் இன்றிருந்தால், வள்ளுவங் காட்டும் வாழ்வுநெறி, மூவாயிரத்தளிர் முகிழ்ப்பதும் சுமப்பதும், தீ சுமந்த தியாக வேள்வியிலே, தாகந் தணித்தெமது தங்கத் தமிழீழம் ஆகும் அப் போதினிலே, கருணைக் கரங்கள், நீ ஓடும்வரை நாம் ஓயோம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 34 உணர்வுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. தேச விடுதலைப் போராட்டத்தை நியாயபூர்வமானதாகவும், அறத்தின்பாற்பட்டதாகவும் கண்டு, அதனை ஊக்கியும், வாழ்த்தியும் பாடி வந்த கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் பிரபாகரப் பெரும் காப்பியத்தினை 47 படலங்களிலான 1300 மரபுக் கவிதைகளில் புலிகளின் குரல் வானொலியில் பாடியளித்துள்ளார். மேலும் 30இற்கும் அதிகமான மாவீர, வீர காவியங்களும் 20க்கும் மேற்பட்ட எழுச்சிப் பாடல்களும் இவரால் பாடப்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12060).