எம்.பி.எம்.நிஸ்வான். பாணந்துறை: ரஹ்மத் பதிப்பகம், 6A, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்த, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பாணந்துறை: V4U அச்சக இல்லம், இல. 25, கருணாரட்ண மாவத்தை, பள்ளிமுல்லை).
54 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-38956-1-5.
அரை நுற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாபூஷணம் எம்.பி.எம்.நிஸ்வான், ஓய்வுபெற்ற ஆசிரியராவார். ஓய்வின் பின்னர் காதி நீதவானாகக் கடமையாற்றியவர். ரமழான் மலர், மூன்றாம் தலாக், குற்றமும் தண்டனையும், மை வெளிச்சம் ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். மரணத்துக்கு முன் மரணியுங்கள், யார் வள்ளல்? கயமை நீக்கிய காரிகை, சகுனம், காதல் தியாக நிலை, கொடுத்தான் கொடுத்தான், பதவியாசை, நாய்க்குணம், சதகத்துல் ஜாரிய்யா, தீனின் வாசம், உத்தம புத்திரி, நிலைக்கண்ணாடி, வாழ வழி வகுப்பீரே, நிம்மதி, உண்மையறிவு, காயமே இது பொய், ஏச்சுப் பிழைக்கும் தொழில், நல்ல தீர்ப்பு, கல்வியும் செல்வமும், விசுவாசப் பிரமாணம் ஆகிய 20 கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது.