மு.கனகராஜன். மானிப்பாய்: மு.கனகராஜன், குருஷேத்திர வெளியீடு, ஆஸ்பத்திரி ஒழுங்கை, 1வது பதிப்பு செப்டெம்பர் 1975. (கொழும்பு 12: கலா அச்சகம், 258/5, டாம்வீதி).
110 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12.5 சமீ.
கலாநிதி க.கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பு இது. இக்கவிதைத் தொகுதியில் ஆசிரியரது நேர்மையுணர்வும், நெஞ்சுரமும், கவிதைகளில் இழையோடியுள்ளன. நிர்மாணம், ஐக்கியம் முதலிய கவிதைகளில் கவிஞரது இலட்சிய வேகம், மயக்கமெதுவுமின்றிப் பிழம்புருவாகப் பிரகாசிக்கின்றது. கனகராஜனின் கவிதைகளில் எவரையும் பின்பற்றும் தன்மையோ, குழு உக்குறிகளைக் கையாளும் பலவீனமோ இல்லை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24733).