கந்தையா ஸ்ரீகணேசன். வவுனியா: வவுனியா ஆங்கிலச் சங்கம் (The English Association of Vavuniya), 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxv,63 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-97524-9-3.
இந்நூலில் சமகால ஈழத்துத் தமிழ்க் கவிஞர்கள் சிலரின் தேர்ந்த கவிதைகள் ஆசிரியரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. குகநிதி குகநேசன் (என்னுடைய தெரிவு), அனார் (இரண்டு பெண்கள்), இலங்கேஸ்வரி (ஆசை), சுதாகரி (ஒரு நிமிடமாவது/நடைப்பிணம்), தம்பிலுவில் ஜெகா (சக்கரம்ஃசுமைகள்), புறெளவ்பி (அற்புத அஞ்சல்/ விடைபெற முடியாத அரங்கினுள்), பெண்ணியா (நிகழ்தல்), யவனிகா (பேசப்படாத துயரங்கள்), விஜயலெட்சுமி சேகரூபன் (நினைவுப் பதிவுகள்/ வெளிறிப்போன கிழக்கு), ஜெயந்தி தளையசிங்கம் (என் பிஞ்சுப் பிள்ளை/மண்வெட்டி), ஹில்டா ரூபினி (விடியல் அட்டவணை), அம்புலி (தேடி அடைவாய்), தமயந்தி (உரக்கச் சொல்லோம்), அமரதாஸ் (துயர்க்காலம்), ஒளவை (சொல்லாமல் போகும் புதல்வர்கள்), த.ஜெயசீலன் (நின்னைப் புரிதல்), யாத்திரிகன் (எனது கவிதை), த.சிவகுமாரன் (முரண்பாடு: முகம் 1), வேலணையூர் தாஸ் (பிள்ளைக் கனவுகள்), த.அஜந்தகுமார் (சொற்களால் கொலைசெய்தல்), முல்லை முஸ்ரிபா (ஆக்கிரமிப்பின் நெடுங்கதை), தானா விஷ்ணு (ஈரமற்ற புன்னகை), ஸர்மிளா ஸெய்யித் (தாழ் உடைத்த நதி), கருணாகரன் (சுற்றிவளைக்கப்பட்ட கிராமத்தின் பதுங்குகுழி), நாக.சிவசிதம்பரம் (ஆள்பவர்க்கு நலம் அடைவு) ஆகிய 25 கவிஞர்களின் 30 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் அடக்கப்பட்டுள்ளன.