13719 தென்னாசியக் கவிதைகள்.

சோ.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

xxvi, 197 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-8568-9.

இத்தொகுதியில் அடங்கியுள்ள 86 கவிதைகளும் சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation- SAARC) நாடுகளைச் சேர்ந்த 65 கவிஞர்களால் ஆக்கப்பட்டவை. இப்பிராந்தியத்து நவீன கவிதை முயற்சிகள் கொமன்வெல்த் கவிதைகள் எனத் தொடங்கி, பின்காலனியக் கவிதைகள் என வளர்ந்து இன்று உலகக் கவிதைகள் என மலர்ந்துள்ளன. அந்நியர் ஆட்சியுள் அகப்பட்டு அடையாளமிழந்த  இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான்ஆகிய சார்க் நாடுகள், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மெல்ல மெல்ல விடுதலை பெற்று நிமிர்ந்தபோதும், சாதி, சமய மோதல்களுக்கும் ஏழ்மை, அறியாமை, சுரண்டல், பெண்ணடிமை எனப் புதிய சவால்களுக்கும் எவ்வாறு முகம் கொடுத்து வந்துள்ளன என்பதை இக்கவிதைகள் பேசுகின்றன. எழுத்துலகில் ‘சோ.ப.’ என்று அறியப்பட்ட சோ.பத்மநாதன்,  கவிஞராக, பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளராகத் தனது பெயரை எம்மிடையே நிலைநிறுத்தியவர்.

ஏனைய பதிவுகள்