நா.விசுவநாத சாஸ்திரிகள். (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், முன்னேஸ்வரம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், நல்லூர்).
ix, 59 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0877-14-0.
யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைச் சார்ந்த அராலியூர் பிரம்மஸ்ரீ நா.விசுவநாத சாஸ்திரிகள் ஆக்கிய இந்நாடக நூல் சுன்னாகம் ஸ்ரீ அ.குமாரசுவாமிப் புலவரவர்களால் பரிசோதிக்கப்பெற்று அராலியூர்ச் சிவன்கோயிற் பூசகர் ஸ்ரீலஸ்ரீ ச.கங்காதரக் குருக்களின் குமாரர் கணேசக் குருக்களால் பதிப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வாசஞ்செய்த பிரபுக்கள், பிராமணக் குருக்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலியோர்களையும் ஆங்காங்கே உள்ள ஊர்கள், தடாகங்கள் முதலியவைகளையும் இடையிடையே வர்ணித்தும், மடக்கு, யமகம், சிலேடை, தொனி முதலிய அலங்காரங்களை அமைத்தும் நகுலமலை மீதும் மாவைக் கந்தசுவாமி மீதுமாக செந்தமிழில் செய்த குறவஞ்சி நாடகம் இதுவாகும். 1895இல் வெளிவந்த இந்நூலின் மீள்பதிப்பு இதுவாகும். பிரம்மஸ்ரீ ச.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54880).