13727 மாயவலை: குறு நாடகப் பிரதிகள்.

எஸ்.ரி.அருள்குமரன். மல்லாகம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோயில் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2017. (சங்கானை: சாய்ராம் பிறின்டேர்ஸ்).

(8), 50 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-3688-00-2.

மானிப்பாய இந்துக் கல்லூரியில் பணியாற்றிவரும் எஸ்.ரி.அருள்குமரன், ஒரு சிறந்த நாடகாசிரியர். நாடகம் தொடர்பான தேடல்களிலும் அதனை ஆற்றுகை செய்வதிலும் முனைப்புக் காட்டும் படைப்பாளியாகவும் நன்கு அறியப்பெற்றவர். இந்நூலில்  மாயவலை, கனவு மெய்ப்பட வேண்டும், சிதறல்கள், சூழலை நேசிப்போம், மனிதராய் வாழ ஆகிய ஐந்து நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பாடசாலை மாணவர்களால் மேடையேற்றப் பெற்றுப் பரிசில்களைப் பெற்றவையாகும். ‘மாயவலை’ உடுவில் மான்ஸ் வித்தியாலயம் நடத்திய நாடகப் போட்டி,  தமிழ்மொழித் தினப்போட்டி, அரச ஊழியருக்கான ஆக்கத்திறன் போட்டி, அளவெட்டி மகாஜனசபை கலைஞர் வட்ட விழா ஆகியவற்றில் மேடையேற்றப்பட்டது. ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ கோட்டமட்ட தமிழ்மொழித்தினப் போட்டி, றோயல் கல்லூரி நடத்திய பிரதியாக்கப் போட்டி ஆகியவற்றில் மேடையேற்றப்பட்டது. ‘சிதறல்கள்’ அரச ஊழியர்களுக்கான நாடகப்போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டது. மனிதராய் வாழ போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக இளைஞர் சேவை மன்றத்தினரால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபெற்றது.

ஏனைய பதிவுகள்