13729 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: மூன்றாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, மார்கழி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1365 Midway Blvd, Unit No.24, மிஸிஸாகா L5C 2J5, ஒன்ராரியோ).

xvi, 206 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21×14 சமீ.

ஆதி கிரேக்க நாடகத் தொடர் வரிசையில் ஏழாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கி.மு.480களில் பிறந்த யூரிப்பைடஸ் எழுதிய நான்கு கிரேக்க நாடகங்களின் தமிழாக்கம். தாயுரிக்காவில் இபிசினியா, ஐயொன், ஹெலன், எலக்ரா நாடகத்தின் முதலாவது பிரிவு: 1-2 தோற்றங்கள் ஆகிய நான்கு தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12625).

ஏனைய பதிவுகள்

15863 அடிப்படைப் புவியியல்: இலங்கை, உலகம்-தரம் 10,11.

க.குணராசா, பிரியா குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு செப்டெம்பர் 2005. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 292 பக்கம்,