அமரர் வல்லி சபாபதி குடும்பத்தினர். யாழ்ப்பாணம்: அமரர் வல்லி சபாபதி நினைவு வெளியீடு, ஆஸ்பத்திரி வீதி, கோண்டாவில் வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
76 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ.
அமரர் வல்லி சபாபதி நினைவு வெளியீடாக 29.01.2018 அன்று வெளியிடப்பட்ட இந்நூலுக்கான தகவல்களைத்தேடி, வரலாற்றுக் குறிப்பை சி.ரமேஷ் எழுதியுள்ளார். அதற்கான தகவல்களை க.சந்திரகுலசிங்கம், தி.செல்லத்துரை, செ.கனகசபை, தி.தெய்வேந்திரம் ஆகியோர் வழங்கியுள்ளனர். இம்மலரில், தந்தையின் பெருமைகூறும் ஐந்து சிறுகதைகள் தேர்ந்து தொகுக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் அப்பாவின் வேட்டி (பிரபஞ்சன்), அப்பாவின் அறை (வான்மதி செந்தில்வாணன்), அப்பா அன்புள்ள அப்பா (சுஜாதா), உடைத்துப்போட்ட தெரு விளக்கு (திருக்கொவில் கவியுகன்), எதிர்வு (நந்தினி சேவியர்) ஆகிய சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.