13746 எங்களில் ஒருத்தி.

ஷெல்லிதாசன் (இயற்பெயர்: பி.கனகரத்தினம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

132 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4628-41-0.

ஏற்கெனவே செம்மாதுளம்பூ, நகரவீதிகளில் நதிப்பிரவாகம் ஆகிய கவிதைத் தொகுதிகளையும், வண்ண வண்ண பூக்கள் என்ற சிறுவர் பாடல் தொகுப்பையும் வெளியிட்ட ஷெல்லிதாசனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு இது. திருக்கோணமலையில் பாலையூற்று வீதியில் வசிக்கும் இப்படைப்பாளியின் சமூக அக்கறைகொண்ட மனிதாபிமான நோக்குடன் கூடிய சிறுகதைகள் இவை. மல்லிகைப்பூ வாசம், சுந்தரகாண்டம், குறிஞ்சிப்பூ, ஆசை அண்ணன், எங்களில் ஒருத்தி, கடவுள், சிறை உடைப்பு, எமக்குள்ளும் சில கறுப்பு ஆடுகள், கரன்சி வாலாயம், அடையமுடியாத அழைப்பு, மழையில் ஓர் அறுவடை ஆகிய பதினொரு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. ஷெல்லிதாசன் இடதுசாரிச் சிந்தனைப் போக்கு உடையவர். சமூக முன்னேற்றம் கருதிய சிந்தனை செயற்பாடுகளை உடையவர். அவரின் இக்கதைகளும் அவரது உளப்பாங்கினைக் காட்டுகின்றன. தன்னைப் பாதித்த உண்மைச் சம்பவங்களே கதைகளாகின என்கிறார் ஆசிரியர்.

ஏனைய பதிவுகள்