சு.ஸ்ரீகுமரன் (புனைபெயர்: இயல்வாணன்), அ.சிவஞானசீலன், சி.ரமேஷ் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xxi, 748 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18 சமீ., ISBN: 978-955-7331-11-9.
சுதந்திரன் பண்ணையில் வளர்ந்த நண்பர்களான சிற்பி, உதயணன், ஈழத்துச் சோமு, ஆகியோரும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் இராஜநாயகனும், ஓவியக் கலைஞர் ஆதவனும் இணைந்து யாழ் மண்ணில் உருவாகியது கலைச்செல்வி என்ற சிற்றிதழாகும். ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி, மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய மிக முக்கியமான சஞ்சிகை இதுவாகும். 1958 இல் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது. இதன் ஆசிரியராக சிற்பி (சி. சரவணபவன்) பணியாற்றினார். கலைச்செல்வி சுமார் எட்டு ஆண்டுகள் மட்டுமே வெளிவந்தது. கலைச்செல்வி இதழ்களில் பிரசுரமான 198 சிறுகதைகளைத் தொகுத்து இப்பாரிய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வட கிழக்குத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலைப் பின்பற்றியதாக இக்கதைகள் உருப்பெற்றுள்ளன.