சுதாராஜ். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001: 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600005: மணி ஓப்செட்).
(10), 11-127 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-21-1.
சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனித நேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளினூடாக வெளிப்படுகின்றன. இந்நூலில் சுதாராஜ் எழுதிய, தொலைந்து போனது, பிறழ்வு, காட்டிலிருந்து வந்தவன், யுத்தங்கள் செய்வது, ஒரு துவக்கின் கதை, உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன, எந்த முகம்? வழி தவறிய ஆடு, உள்ளுறை வெப்பம், இரவு வெளிச்சம் ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் பின்னட்டையில் ISBN: 978-93-86820-20-4 என அச்சிடப்பட்டுள்ளது.