13757 புதிய பரிமாணம்.

புலோலியூர் க.சதாசிவம். புலோலி: திருமதி லட்சுமி சதாசிவம், கலையகம், புற்றளை, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (பண்டாரவளை: மேர்க்குரி பிரின்டிங் வேர்க்ஸ், இல. 339 A, பிரதான வீதி).

(2), 118 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 18×13 சமீ.

சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் எனப் பன்முகப் படைப்பாற்றல் கைவரப் பெற்றவர் புலோலியூர் க.சதாசிவம் (20.3.1942-14.09.2004). தொழில் ரீதியாக அவர் ஒரு வைத்தியர் என்ற போதும் இலக்கியம், வைத்தியம் ஆகிய இரு துறைகளிலும் உறுதியாகவும் சமனாகவும் கால் ஊன்றி நின்றவர் இவர். தான் பிறந்து வளர்ந்து மணம் முடித்த வடமராட்சி மண் ஒரு கண் என்றால், தொழில் ரீதியாக இணைந்து அவரது வாழ்க்கைப் பயணத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டுவிட்ட மலையகம் மறு கண் எனலாம். இவர் பல மருத்துவக் கட்டுரைகளையும் தினக்குரலில் எழுதியுள்ளார். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் போர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும், நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் நூலுருவாகியுள்ளன. இவற்றில் அவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பரிமாணம் என்ற இந்த நூலும் யாழ் இலக்கிய வட்டத்தின் பரிசை வென்றுள்ளது. இதில் தீருமா? ஆடிப்பூசை, எட்டாத கனி, ஐயோ அம்மே, இடறும் கால், புதிய பரிமாணம், போகாத இடந்தனிலே, மனிதம் உருமாற்றும் உறவுகள் ஆகிய எட்டுச் சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  152066). 

ஏனைய பதிவுகள்

Giros Dado acimade Cassinos Online 2025

Conhecimento ajudar aquele site, você concorda aquele leu aquele aceitou os nossos Termos infantilidade Comportamento e acrescentar nossa  Astúcia de Privacidade. Operamos infantilidade forma autónomo

Graj na automacie Lord of the Ocean darmowo już

Wówczas gdy zauważyliście u siebie objawy uzależnienia skontaktujcie uwagi pochodzące z serwisami przedkładającymi pomoc przy wyjściu z nałogu hazardowego. Posejdon, władca mórz oraz oceanów wydaje