13760 மறக்க மறுக்கும் மனசு.

மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (ஜேர்மனி: Stuttgart).

116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-3-9813002-8-4.

இது மன ஓசையின் ஒன்பதாவது வெளியீடு. நெஞ்சில் நின்றவை என்ற தொகுப்பில் தாயகத்தின் நினைவுகளைப் பதிந்த நூலாசிரியர், இந்நூலில் தான் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தின் நினைவுகளை 27 ஆக்கங்களில் பதிந்துவைத்துள்ளார். நீண்டகாலமாக ஜேர்மனியில் வாழ்ந்துவரும் மூனா, ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். கருத்துப்பட ஓவியக்கலை பெரியளவில் வளர்ச்சிபெறாத ஈழத்தமிழ் சமூகத்தில் மூனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரிடம் இயல்பாகவே உள்ள நகைச்சுவை உணர்வு கருத்துப் படங்களையும் அதே நகைச்சுவை கலந்த கிண்டலுடன் வரைவதற்கான ஆற்றலை அவருக்கு கொடுத்திருக்கிறது. தவிர, இதே நகைச்சுவையை இந்நூலில் உள்ள எழுத்தாக்கங்களிலும் ரசிக்க முடிகின்றது. இவரது ஐம்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் ஐபிசி வானொலியில் ஒலிபரப்பாகி இருக்கின்றன. பல நாடகங்கள் ஜெர்மனியில் மேடையேறி பார்வையாளர்களின் பலத்த பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. இவரது தாயென்னும் கோயில் என்னும் நாடகம் உலகளாவிய தமிழர்களுக்கிடையே லண்டன் ஐபிசி வானொலி நடாத்திய நாடகப் போட்டியில் தெரிவாகி முதலாவது பரிசாகத் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தது. இந்நூலில் சொர்க்கமே என்றாலும் ஷோபா (ளுழகய) போல் வருமா? அலாரிப்பும் அங்கலாய்ப்பும், யார் சொல்லுவார், ஒரு இசையும் கதையும், கூடையில் ரெலிபோன், மரணத்தைத் தேடி, முடிவு என்பது அடக்கம், குமாரியான குழந்தை, இன்னுமொரு வழக்கு, அரோஹரா ஆறுமுகா, இலவசமாகக் கொஞ்சம் ஹைட்ரஜன் சல்பைட் தரவா, எங்கே அவன் தேடுதே சனம், அந்தக் கரித்துண்டைத் தூக்கி அங்காலை எறியுங்கோ, படம் பார்த்துக் கதை சொல்லு, எப்போ தான் சொல்லுவீங்கள்?, நான் சிறுத்துப் போனேன், செத்துப்போன கருவாடு, காணி நிலம் வீடு, பிழைக்கத் தெரிந்தவள், தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே, நேரம் நல்ல நேரம், மாலை சூட வா, குண்டுச்சட்டியும் குதிரை ஓட்டமும், இல்லாமை நீங்கவேண்டும், சட்டத்தின் முன்னால், மடியில் ஒளிந்திருக்கும் சிறு விஷம், தனி ஒரு மனிதன் திருந்திவிட்டால் ஆகிய தலைப்புகளில் இவரது அனுபவங்கள் இங்கே அங்கதச் சுவையுடன் பகிரப்பட்டுள்ளன. முன்னட்டையில் ‘மறந்துபோக மறுக்கும் மனசு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்