கோகிலா மகேந்திரன் (தொகுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தெல்லிப்பழை கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்).
x, 285 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 19.5×15 சமீ., ISBN: 978-955-7973-03-6.
இந்நூலில் ‘கதைகள்’ என்ற பிரிவில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் 1980 தொடக்கம் 2015வரை எழுதிய பலியாடுகள், ஒரு பிணத்தின் தரிசனம், அர்த்தமற்ற ஒரு வாழ்வு, உள்ளத்தால் அடிமைகள், சடப்பொருள் என்றுதான் நினைப்போ?, ஒரு சதுரம் இருளாக, எரியும், முகாமுக்குப் போகாத அகதி, மனதையே கழுவி, காற்றுக்கு மூச்சு நிண்டு போச்சு, பூக்குளிப்பு, கூறானது மனம், புலன்களுக்கு அப்பால் உள்வாங்குதல், விழுதலும் எழுதலும், கால் ஒப்பம், சுன்னாகம்-சிட்னி-சுன்னாகம், ஜக்கரண்டா, ஆத்ம இம்சை ஆகிய 18 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. ‘ஆய்வு’ என்ற பிரிவில் கோகிலா மகேந்திரனின் படைப்புலகம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. அறியப்பட்ட எழுத்தாளர் (நா.சண்முகலிங்கன்), கோகிலா மகேந்திரனின் சிறுகதைகள் (ரஜனி லட்சுமணன்), கோகிலா மகேந்திரனின் படைப்புகளில் பெண்கள் (த.தவனேஸ்வரி), கோகிலா மகேந்திரனின் உளவியற் கதைகள் (கே.எஸ்.சிவகுமாரன்), முகங்களும் மூடிகளும் (எம்.கே.முருகானந்தன்), கோகிலா மகேந்திரன் (செங்கை ஆழியான்), மனித சொரூபங்கள்: சிறுகதைத் தொகுதி, கோகிலா மகேந்திரனின் சில கதைகள்: ஒருவெட்டுமுகம் (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), கோகிலா மகேந்திரனின் முகங்களும் மூடிகளும் : சிறுகதைத் தொகுதி ஒரு பார்வை (எஸ்.சிவமலர்), வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் (அன்னலட்சுமி இராசதுரை) ஆகிய கட்டுரைகளே அவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61516).