13766 வாழப் பிறந்தவள்.

முருகேசு தம்பிப்பிள்ளை. மட்டக்களப்பு: கலாபூஷணம் முருகேசு தம்பிப்பிள்ளை, குருமண்வெளி, 1வது பதிப்பு, 2017. (களுதாவளை: மாருதி அச்சகம்).

(2), 164 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41533-2-5.

இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் வாழப்பிறந்தவள், விதியின் கொடுமை, இவள் ஒரு புதுமைப்பெண், உதிர்ந்த மலர்கள், ஒரு காதற் கொலை, இரத்த உறவு, இதய சங்கமம், ஏமாற்றம், உபகாரம், சுவீகாரம், தலைவிதி,  ஒன்றுபட்ட உள்ளங்கள், அற்புதக் குழந்தை, இதயக் கதவுகள் திறந்தன, துணையைத் தேடி ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் முருகேசு தம்பிப்பிள்ளை மட்டக்களப்பின் மகிழூர்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். குருமண்வெளியில் வாழ்ந்து வருகின்றார். 36 வருடம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் டிப்ளோமா பட்டம் பெற்ற கலைப்பட்டதாரியுமாவார். வெற்றித் திருமகன் என்ற இலக்கிய நூலும், மனம் போல் வாழ்வு என்ற நாடகத் தொகுப்பும் இவரால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13153 யாழ்ப்பாணம்-திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு.

வை.அநவரத விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அபிநயா பதிப்பகம், 65/1, நாயன்மார் வீதி, நல்லூர்). xx, 94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

17458 பூ வண்ணத்துப் பூச்சி.

சிட்னி மாகஸ் டயஸ் (சிங்கள மூலம்;), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). ஆனமடுவ: தோதென்ன வெளியீடு, உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, 2014. (கணேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52, A/1, கலஹிடியாவ). 16 பக்கம்,